/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஷேர் ஆட்டோ இயக்கம்: போலீசார் சோதனை
/
ஷேர் ஆட்டோ இயக்கம்: போலீசார் சோதனை
ADDED : மே 05, 2025 05:16 AM

பாகூர், : கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் ஷேர் ஆட்டோக்கள் இயக்கம் குறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கடலுாரில் இருந்து முள்ளோடை, பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம் வழியாக ரெட்டிச்சாவடி வரை, 200க்கும் மேற்பட்ட ேஷர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்டோக்கள் முறையான ஆவணங்கள் இன்றியும், பாதுகாப்பற்ற முறையிலும் இயக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி தெற்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.பி., மோகன்குமார் உத்தரவின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தன்வந்திரி,சப் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், இருதயநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அதில், ஷேர் ஆட்டோக்களுக்கு பர்மிட், இன்சூரன்ஸ், தகுதி சான்றிதழ் காலாவதி ஆகும் தருவாயில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார், ஆவணங்கள் காலாவதிக்கு பின் ஆட்டோக்களை இயக்கினால், நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.