/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புற்றீசல் போல் முளைத்த தரமற்ற ஹெல்மெட் விற்பனை கடைகள் பொதுமக்களே உஷார்...
/
புற்றீசல் போல் முளைத்த தரமற்ற ஹெல்மெட் விற்பனை கடைகள் பொதுமக்களே உஷார்...
புற்றீசல் போல் முளைத்த தரமற்ற ஹெல்மெட் விற்பனை கடைகள் பொதுமக்களே உஷார்...
புற்றீசல் போல் முளைத்த தரமற்ற ஹெல்மெட் விற்பனை கடைகள் பொதுமக்களே உஷார்...
ADDED : ஜன 15, 2025 12:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி முழுதும் சாலையோரம், திடீரென முளைத்துள்ள வடமாநில கும்பலின் தரமற்ற ஹெல்மெட் விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும்.புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம் உத்தரவு கடந்த 12ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் தலா ரூ. 1000 அபராதம் விதித்து வருகின்றனர். இதனால், ஹெல்மெட் வாங்காத வாகன ஓட்டிகள், ஹெல்மெட் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாய உத்தரவு என்ற தகவலை தெரிந்து கொண்ட வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் தற்போது புதுச்சேரி முழுதும் நுாற்றுக்கணக்கான இடங்களில் சாலையோரம் திடீர் ஹெல்மெட் வியாபாரத்தை துவக்கி உள்ளனர்.ஒரு ஹெல்மெட் ரூ. 300 முதல் ரூ. 500 வரை விற்பனை செய்கின்றனர். இவை அணைத்தும் ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத தரமற்றஹெல்மெட்டுகள். கீழே விழுந்தால் மண் சட்டியை போல உடைய கூடியது. விலை குறைவு மற்றும் மக்களின் அறியாமை காரணத்தால் இந்த ஹெல்மெட்டுகளையும் சிலர் வாங்கி செல்கின்றனர்
.இத்தகைய ஹெல்மெட்டுகளை அணிந்து செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வதிற்கு சமம். எனவே, புதுச்சேரி முழுதும் புற்றீசல் போல் முளைத்துள்ள தரமற்ற ஹெல்மெட் விற்பனையைபோலீசார் கண்காணித்து, தரமான ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய ஹெல்மெட் மட்டுமே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

