/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிலம்பம் அடிமுறை சங்க பொதுக்குழு கூட்டம்
/
சிலம்பம் அடிமுறை சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : மே 28, 2025 11:47 PM

பாகூர்: சிலம்பம் விளையாட்டிற்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என, புதுச்சேரி சிலம்பம் அடிமுறை சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
புதுச்சேரி சிலம்பம் அடிமுறை சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பாகூரில் நடந்தது. சங்க தலைவர் கேசவன் வரவேற்றார். செயலாளர் அன்புநிலவன் தலைமை தாங்கி, கடந்த நிதியாண்டில் செய்த நிகழ்வுகள், இந்த நிதியாண்டில் எட்ட வேண்டிய இலக்குகள் பற்றி பேசினார். சுந்தர்ராஜன் புதிய கவுரவ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்தில் புதுச்சேரி அரசு சிலம்பம் விளையாட்டை அங்கீகாரம் செய்து, மற்ற விளையாட்டுகளுக்கு வழங்கும் சலுகைககளை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், சிலம்பம் விளையாட்டிற்கான அங்கீகாரத்தை துரிதமாக வழங்கிட வலியுறுத்தி, வரும் ஜூன் மாதம் புதுச்சேரி சிலம்பம் அடிமுறை சங்கம் சார்பாக வீரர்கள் மற்றும் சிலம்பம் ஆசிரியர்கள் பங்கேற்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், பாகூர் கரிகாலன் சோழன் சிலம்பட்ட கழக மேலாளர் வெற்றிவேல், திருக்காஞ்சி நரிமேடு இளைஞர் நற்பணி மன்ற தலைவர் கார்த்திகேயன், வந்தியத்தேவன் கலைக்கூடத்தின் ஆசிரியர் விஜயகுமார், வீர கலை அகாடமி ஆசிரியர் பிரவீன், திருக்குறள் மன்ற ஆசிரியர் பிரவீன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் அதியமான் நன்றி கூறினார்.