UPDATED : நவ 06, 2026 07:21 PM
ADDED : நவ 06, 2026 01:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி ராதே அறக்கட்டளை சார்பில், பொறியாளர் தேவதாஸ் இயற்றிய கொழுக்கட்டை சிறார் பாடல்கள் இசைவடிவில் ராதே பாச்சரம் வலையொளியின் அறிமுகம் விழா, தமிழ் மொழிப்பாடத்தில் உயர் மதிப்பென் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு வழங்கும் விழா ஜெயராம் ஓட்டலில் நடந்தது.
கவியரசு கண்ணதாசன் இலக்கிய கழகம் நிறுவனர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். சுகுமார் வரவேற்றார். லால்பகதுார் சாஸ்திரி சமூக சேவை மன்ற நிறுவனர் முருகன், அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதே அறக்கட்டளை நிறுவனர் ராதே நோக்கவுரையாற்றினார். வழக்கறிஞர் சுகுமாரன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பளராக புதுச்சேரி பல்கலைக்கழகம் தமிழ்த்துறை தலைவர் ரவிக்குமார் கலந்து கொண்டு வலையொளியை அறிமுகம் செய்து வைத்தார்.
புதுச்சேரி அரசு அச்சகம் முதுநிலை கணக்கு அதிகாரி ஓய்வு சாய்நாதன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கலைமாமணி புதிமம் அமைப்பின் தலைவர் சுந்தர லட்சுமி நாராயணன் கருத்துரை வழங்கினார்.
செந்தில்குமார் நன்றி கூறினார்.
