/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 மணி நேரத்தில் உருவான பாடல் பாடகர் கிருஷ்ணாவின் புதிய மைல் கல்
/
4 மணி நேரத்தில் உருவான பாடல் பாடகர் கிருஷ்ணாவின் புதிய மைல் கல்
4 மணி நேரத்தில் உருவான பாடல் பாடகர் கிருஷ்ணாவின் புதிய மைல் கல்
4 மணி நேரத்தில் உருவான பாடல் பாடகர் கிருஷ்ணாவின் புதிய மைல் கல்
ADDED : டிச 07, 2025 06:24 AM

இ சை உலகில் தனித்துவமான குரலும், மேடையனைத்திலும் மறைந்த பாடகர் எஸ்.பி.பி., குரல் நிழலை நேர்த்தியாக மீட்டெடுத்து பாராட்டைப் பெற்று வருபவர் புதுச்சேரியின் பிரபல பாடகர் கிருஷ்ணா.
மேடை நிகழ்ச்சிகளில் மட்டும் அல்லாமல், தற்போது தமிழ் திரைப்பட இசையமைப்பிலும் தன்னைச் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.
அவரின் புதிய படைப்புத் திறனையும், புதுமையான முயற்சியையும் வெளிப்படுத்தும் வகையில், நம்பி சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்காக ஒரு மிக அழகான காதல் பாடல் உருவாகியுள்ளது. 'என் ஜன்னல் ஓரத்தில்' என்கிற இந்த மென்மையான பாடல் முழுதும் புதுச்சேரி கலைஞர்களின் திறமையால் மலர்ந்தது என்பதே சிறப்பு.
கீபோர்ட் வெங்கட் மற்றும் ரிதம் புரோகிராமர் யுவான் என்ற இரண்டு திறமையான புதுச்சேரி இசைக்கலைஞர்களை மட்டும் கொண்டு, ஜெ.ஜெ. ஒலிப்பதிவுக் கூடத்தில் நான்கு மணி நேரத்தில் பாடல் எழுதி, இசை அமைத்து, பாடியிருக்கிறார் கிருஷ்ணா. இன்றைய திரைப்பட இசை சூழலில் ஒரு பாடல் உருவாக பல நாட்கள் பிடிக்கும் நிலையில், இவ்வளவு குறுகிய நேரத்தில் உருவாகிய இந்த படைப்பு உண்மையிலேயே ஒரு சாதனை. பாடகர் கிருஷ்ணா இதுகுறித்து கூறுகையில், 'இது நான் இசையமைக்கும் இரண்டாவது திரைப்படம்.
சிறிய முதலீட்டில் உருவாகும் இந்தப் படத்திற்காக, அழகிய காதல் உணர்ச்சிகளை 'என் ஜன்னல் ஓரத்தில்' என்ற பாடலை, கர்நாடக இசையின் சங்கராபரணம் ராகத்தில், இன்றைய இளம் தலைமுறை ரசிக்கும் வகையில், நவீன டிரெண்ட் இசைக்கேற்ப அமைத்துள்ளேன்.
பாடல் மிகவும் மென்மையாக, காதல் நிழலுடன் வந்துள்ளது. இரண்டு கலைஞர்கள் மட்டுமே இருப்பினும் அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் நான்கு மணி நேரத்தில் பாடல் பிறந்தது. இது உண்மையாகவே என் இசை பயணத்தில் ஒரு சிறப்பான தருணம். இந்த பாடல் நிச்சயம் பேசப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கு முன் கிருஷ்ணா இசையமைத்த வெள்ளந்தி திரைப்படப் பாடல்களை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டு இருந்தார்.
மேலும் இசைத் துறையில் அவர் செய்த சேவைக்காக கலை ரத்னா விருது பெற்றிருப்பது அவரது திறமைக்கும், பயணத்திற்கும் ஒரு பெருமைச் சின்னமாக திகழ்கிறது.
நான்கு மணி நேர சாதனை பாடலுக்காக புதுச்சேரியின் மண்ணில் இருந்து எழுந்த இசை விண்மீன் கிருஷ்ணா என்று அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
என் ஜன்னல் ஓரத்தில் பாடல் நிச்சயம் இசை ரசிகர்களின் இதயங்களில் ஜன்னலைத் திறந்து நின்று பாடும் மெலோடியான நினைவாக மாறும்.

