UPDATED : அக் 26, 2026 08:18 PM
ADDED : அக் 26, 2026 08:14 PM
புதுச்சேரி: மாநில வங்கியாளர்கள் குழுமம் சார்பில், மத்திய அரசு திட்டங்கள் குறித்து, சிறப்பு முகாமை, அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
இந்திய அரசு நிதி சேவைகள் துறை சார்பில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் வகையில், அக்., 21 முதல் டிச., 31ம் தேதி வரை நிதி உள்ளடக்கம் முழுமை அடைவதற்கான பிரசாரம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் சார்பில், நெல்லித்தோப்பு கீர்த்தி மஹாலில், நேற்று நடந்த சிறப்பு முகாமை, அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் யாரசி ஜெயக்குமார், துணை கலெக்டர் ரூபல் ராணா, சென்னை இந்தியன் வங்கி பொது மேலாளர் பத்மாவதி, புதுச்சேரி வங்கியாளர்கள் ஒருங்கிணைப்பாளர் வெங்கட சுப்பிரமணியன், மேலாளர் சதீஷ்குமார் உட்பட பல்வேறு வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.
முகாமில், தகுதியுள்ள பொதுமக்களை பல்வேறு நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நிதி சார்ந்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
