தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தென்னிந்திய நாடகப் போட்டி பிரசிடென்சி பள்ளிக்கு 3ம் பரிசு

தென்னிந்திய நாடகப் போட்டி பிரசிடென்சி பள்ளிக்கு 3ம் பரிசு

தென்னிந்திய நாடகப் போட்டி பிரசிடென்சி பள்ளிக்கு 3ம் பரிசு


UPDATED : நவ 27, 2026 11:22 PM

ADDED : நவ 27, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 11:22 PM ADDED : நவ 27, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி, பெங்களூருவில் நடந்த தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது.

ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி அரசு கல்வித்துறை மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படும் பள்ளி அளவிலான அறிவியல் நாடகப்போட்டியில் பங்கேற்று மண்டல மற்றும் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்து, தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தகுதிப்பெற்றது.

பெங்களூருவில் நடந்த தென்னிந்திய அளவிலான நாடகப் போட்டியில் பிரசடென்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் லோகேந்திரலிங்கம், டேலின் மர்வின், சுபாஷினி, பவ்யா, தேவநாத், சாமுவேல், தேஷிகா, சாதனா ஆகியோர் பங்கேற்ற சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மூன்றாம் பரிசு பெற்றனர்.

அவர்களை, பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்திராணி, செயலாளர் கவுதம் ஆகியோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.

தொடர்ந்து 6 ஆண்டுகளாக தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடகப்போட்டிக்கு தேர்வான ஒரே பள்ளி இதுவாகம். தென்னிந்திய அளவில் நடந்த நாடக போட்டியில் புதுச்சேரி சார்பில் மூன்றாம் பரிசு பெற்ற ஒரே பள்ளி என்ற சாதனையும் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us