/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 19.27 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
/
ரூ. 19.27 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ரூ. 19.27 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ரூ. 19.27 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 10, 2026 05:29 AM

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் 19.27 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மணவெளி தொகுதி, பூரணாங்குப்பம் வாழுமுனி நகரில் 5.81 லட்சம் ரூபாய் மதிப்பில் செம்மண் சாலை அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, அபிஷேகப்பாக்கம் சண்முகா டைமன் சிட்டியில், 13.46 லட்சம் மதிப்பில் செம்மண் சாலை அமைக்கும் பணியை, துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி உதவிப் பொறியாளர் ராமன் இளநிலைப் பொறியாளர் சிவப்பிரகாசம், பணி ஆய்வாளர் கணேசன், திட்ட ஊழியர்கள் ஹரிராமன், சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.