ADDED : செப் 05, 2025 02:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்,: மணவெளி தொகுதியில், வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 7.60 லட்சம் ரூபாய்க்கான ஆணையை, சபாநாயர் செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார்.
மணவெளி தொகுதியில், வீடு கட்டும் திட்டத்தின் கீழ், குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை மூலம், 24 பேருக்கு உதவித்தொகைக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, தவளக்குப்பம் எல்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
சபாநாயகர் செல்வம், பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில், முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரன், உதவிப்பொறியாளர் சுனில்குமார், இளநிலைப்பொறியாளர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.