ADDED : டிச 29, 2025 05:45 AM

மக்களோடு நெருக்கமான தினமலர் நாளிதழின் மெகா கோலப்போட்டியில் பல உணர்ச்சிக்கரமான சம்பவங்களும் நடந்தன. எந்த அளவிற்கு தினமலரையும், கோலப்போட்டியையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்; நேசிக்கின்றனர் என்பதை பல சம்பவங்கள் வெளிப்படுத்தியது.
கோலப்போட்டியில் குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த சுவேதா என்னும் இளம்பெண், டிசைன் கோலமும், தட்டாஞ்சாவடியை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி சிவ சத்யா புள்ளி கோலமிட்டனர். இவர்களுக்கு சிறப்பு பரிசும் கிடைத்து, வாழ்த்து மழையில் நனைந்தனர்.
குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன நிலையில், கோலப்போட்டியில் பங்கேற்றிருக்கிறீர்கள். உடல்நிலை, ஓய்வு… இவை எல்லாம் நினைவுக்கு வரவில்லையா என்ற கேள்வியை முன் வைத்தபோது புன்னகையுடன் எதிர்கொண்ட சுவேதா...
இப்படி தான் கோலப் போட்டியில் பங்கேற்க துணிச்சல் எங்கிருந்து வந்தது பலரும் கேட்டனர். 'ஆனால் உண்மைய சொல்லணும்னா… குழந்தையைப் பார்த்து தான் இந்த துணிச்சலே வந்தது.குழந்தை யின் முகத்தைப் பார்க்கும்போது ஒரு சக்தி கிடைக்குது. 'நீ எதையும் ஜெயிக்கலாம்'ன்னு குழந்தையின்கண்களே சொல்லுற மாதிரி இருந்தது. உடம்பு சோர்வா இருந்தாலும், மனசு முழுக்க சந்தோஷமா இருந்தது. இப்ப எதுக்கு இவ்வளவு சிரமம்'ன்னு சொன்னாங்க. ஆனா இது சிரமம்னு தோணல. கோலம் போடும்போது நான் ஒரு தாயா இல்ல… ஒரு கனவு கொண்ட பெண்ணா இருந்தேன்' என்றார் பூரிப்புடன்....
அடுத்து சிறப்பு பரிசுடன் உற்சாகமாக இருந்த நான்கு மாத கர்ப்பிணியான சிவ சத்தியா பேசும்போது, நீங்க ரிஸ்க் எடுக்காதீங்க'ன்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா நான் இதை ரிஸ்க்ன்னு பார்க்கல. இது என் சந்தோஷம். ஒரு தாய் சந்தோஷமா இருந்தா, குழந்தையும் நலமா தான் இருக்கும். சிறப்பு பரிசை கண்டிப்பாக எதிர்பார்க்கலா. போட்டியில் பரிசு பணமோ, பொருளோ முக்கியம் இல்ல… எங்களை தேர்வு செய்ததன் மூலம் தினமலர் எங்களை புரிஞ்சுக்கிட்டாங்கன்னு தோணுச்சு. 'பெண்களோட ஆர்வத்துக்கும் கனவுக்கும் மதிப்பு இருக்கு'ன்னு அந்த நிமிஷம் உணர்ந்தேன் என்றார்.

