/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா திருவிழாவாக மாறிய கோலப் போட்டி
/
சுற்றுலா திருவிழாவாக மாறிய கோலப் போட்டி
ADDED : டிச 29, 2025 05:44 AM
புதுச்சேரி: தினமலர் கோலப் போட்டியால் கடற்கரை சாலை முழுதும் வண்ணமயமாக காட்சியளித்தது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளை கோலப் போட்டி பெரிதும் கவர்ந்தது.
குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோலங்களை பார்த்து ரசித்ததுடன், அதுகுறித்த விபரங்களை ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.
மேலும், நமது கலாசாரத்தின் ஒரு அங்கமாக கோலம் திகழ்வதை அறிந்து பாராட்டு தெரிவித்தனர். வண்ண வண்ண கோலங்களின் முன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் கோலங்களை ஆர்வமாக கண்டு களித்தனர். கோலங்களை போட்டோ எடுத்து தங்கள் மொபைல் போன்களில் ஆவணப்படுத்தி கொண்டனர்.
ஒட்டுமொத்தத்தில் தினமலர் நடத்திய மெகா கோலப் போட்டி, சுற்றுலா திருவிழாவாக மாறி விட்டது என்பது தான் உண்மை.
கோலப்போட்டி என்றாலும் விளையாட்டு கோலங்களுக்கு இந்த முறை பஞ்சமில்லை.
ஓவியங்கள் போன்று விளையாட்டுகளை கோலத்துடன் இணைத்து போட்டு பதிவு செய்திருந்தனர். குழந்தைகளை மொபைலில் மூழ்கிவிட செய்யாமல் மைதானங்களில் விளையாட விடுங்கள் என்று பெற்றோர்களுக்கு கோலங்கள் வாயிலாக வேண்டுகோள் விட்டனர்.

