/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சிறப்பு ஹோமம்
/
புதிய அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சிறப்பு ஹோமம்
புதிய அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சிறப்பு ஹோமம்
புதிய அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சிறப்பு ஹோமம்
ADDED : மார் 13, 2024 06:55 AM

புதுச்சேரி : புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திருமுருகனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் கணபதி ஹோமம் நடந்தது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் 4 அமைச்சர்கள் இருந்தனர். இதில், காரைக்கால் நெடுங்காடு (தனி) தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா, போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி சந்திரபிரியங்காவை, அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ரங்கசாமி நீக்கினார். சந்திரபிரியங்கா வகித்து வந்த துறைகள் புதுச்சேரி அமைச்சரவையில் யாரிடமும் அளிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., திருமுருகன் அமைச்சராக நியமிக்க முதல்வர் ரங்கசாமி, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். ஜனாதிபதியும் திருமுருகனை அமைச்சராக நியமிக்க ஒப்புதல் அளித்தார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
அமைச்சர் திருமுருகன் பதவியேற்பு விழா நாளை 14ம் தேதி காலை 10:45 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருமுருகன் அமைச்சருக்கு, சந்திரபிரியங்கா பயன்படுத்தி வந்த அறை கடந்த ஒரு வாரமாக தயார் செய்யும் பணி நடந்தது.
அறையின் உட்புற பணிகளும், இருக்கைகள் மாற்றும் பணி நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அமைச்சர் அறையில் நேற்று சிறப்பு பூஜைகளுடன் கணபதி ஹோமம் நடந்தது. இதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திருமுருகன் மனைவியுடன் கலந்து கொண்டார். பூஜைகள் முடிந்த பின்பு, அலமாரி, டேபிள், சேர் உள்ளிட்டவை அலுவலகத்திற்குள் வைக்கப்பட்டு வருகிறது.

