/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டு, தட்டாஞ்சாவடியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
/
காலாப்பட்டு, தட்டாஞ்சாவடியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
காலாப்பட்டு, தட்டாஞ்சாவடியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
காலாப்பட்டு, தட்டாஞ்சாவடியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
ADDED : ஜன 11, 2026 05:11 AM
புதுச்சேரி: காலாப்பட்டு, தட்டாஞ்சாவடியில் மூன்று இடங்களில் இன்று (11ம் தேதி) வரி வசூல் மையம் இயங்கும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சி வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்துவோரின் நலன் கருதி வரும் இன்று (11ம் தேதி) காலாபட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுனாமி குடியிருப்பில் உள்ள அங்கன்வாடி மையம் என, இரண்டு இடங்களிலும், வரி வசூல் சிறப்பு முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கணபதிசெட்டிக்குளம், பெரியகாலாப்பட்டு, சின்னகாலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, சுனாமி குடியிருப்பு மற்றும் இதர வார்டுகளில் உள்ள சொத்து வரி, சேவை வரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவைதாரர்கள் 2025-26ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தலாம்.
இதேபோல், இன்று (11ம் தேதி) தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகர் வீட்டு வரி வசூல் மையம், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்ந்து இயங்கும். அது சமயம், உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைத்தாரர்கள் 2025-26-ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்தி வட்டி மற்றும் ஐப்தி நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியில் பி.பி.பீ.எஸ்., ஜிபே., போன் பே., மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவும் வரியை செலுத்தலாம்.

