/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரும் 6ம் தேதி சனிப் பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு யாகம்
/
வரும் 6ம் தேதி சனிப் பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு யாகம்
வரும் 6ம் தேதி சனிப் பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு யாகம்
வரும் 6ம் தேதி சனிப் பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு யாகம்
ADDED : பிப் 21, 2026 07:09 AM

புதுச்சேரி: சனிப்பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் 6ம் தேதி சிறப்பு யாகம் மற்றும் மகர கும்ப தீபம் ஏற்றப்படுகிறது.
நவகிரகங்களில் ஒருவரான சனீஸ்வரர் வரும் மார்ச் 6ம் தேதி காலை 8:26 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.
இச்சனிப் பெயர்ச்சி தோஷத்தில் இருந்து உலக மக்களை காத்திட வேண்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது.
இப்பூஜையில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும்.
பங்கேற்க விரும்புவோர் கோவிலில் ரூ. 3,000 செலுத்தி தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், விபரம் வேண்டுவோர் 93454 51655 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்