/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மேடைப்பேச்சு பயிலரங்கம்; பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
/
மேடைப்பேச்சு பயிலரங்கம்; பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
மேடைப்பேச்சு பயிலரங்கம்; பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
மேடைப்பேச்சு பயிலரங்கம்; பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஏப் 12, 2025 07:26 AM
புதுச்சேரி; மாணவர்களுக்கான சிறுகதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நாடகம் இயற்றுதல், நடித்தல் மற்றும் மேடைப் பேச்சுக்கான பயிலரங்கம் வரும் 20ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களின் கலை ஆற்றலை மேம்படுத்தம் பொருட்டு புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் சார்பில் பயிலரங்கம் வரும் 20ம் தேதி புதுச்சேரி, முத்தரையர்பாளையம், இளங்கோ அடிகள் அரசு மேனிலைப் பள்ளியில் நடக்கிறது.
பயிலரங்கில், சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதவும், , ஓவியம் வரைதல், நாடகம் இயற்றுதல், நடித்தல் மற்றும் மேடைப்பேச்சுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிலரங்கில் 9ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். நுழைவுக்கட்டணம் இல்லை. ஒருவர், ஒரு பயிலரங்கில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். பயிலரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, முடிவில் சான்றிதழ்வழங்கப்படும்.
பயிலரங்கில் பயிற்சிப் பெற விரும்வோர், பெயர், பெற்றோர் பெயர், பாலினம், வயது (பிறந்ததேதியுடன்), படிக்கும் பள்ளி மற்றும் கல்லுாரியின் பெயர்,படிக்கும் வகுப்பு, பயிலரங்கில் பங்கேற்க விரும்பும் பிரிவு, வாட்ஸ் ஆப் எண் ஆகியவற்றை கையால் எழுதியோ அல்லது தட்டச்சு செய்துகையெழுத்திட்டு வரும் 15ம் தேதிக்குள் 98947 55985, 79042 35300 ஆகிய வாட்ஸ் ஆப் எண்கள் அல்லது,aruselvan 1959@gmail.comஎன்ற மின்னஞ்சலில் அனுப்பிட வேண்டும்.