/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., ஆதரவுடன் ஏனாமில் மீண்டும் போட்டி கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் அறிவிப்பு

ADDED : நவ 26, 2025 07:48 AM
புதுச்சேரி: ஏனாமில் பா.ஜ., ஆதரவோடு ஏனாம் மீண்டும் போட்டியிடுவேன் என சுயேச்சை எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் அறிவித்துள்ளார்.
ஏனாம் சுயேச்சை எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜ., ஆதரவுடன் போட்டியிடவில்லை என என சமூக வளைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதனை மறுத்துள்ள கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்றது முதல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறேன். சமீபகாலமாக சில தீய குணம் கொண்ட அரசியல்வாதிகள் தவறான பிரசாரத்தை ஏனாம் மக்களிடம் சமூகவலைதளங்கள், ஊடகம் மூலம் பரப்பி வருகின்றனர்.இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஏனாம் மக்களின் விருப்பப்படி, எதிர்காலத்தில் மட்டுமல்ல, வரும் தேர்தல்களிலும் பா.ஜ., ஆதரவோடு போட்டியிடுவேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.