ADDED : நவ 17, 2026 09:19 PM
புதுச்சேரி: ஜிப்மரில் 5வது தேசிய சுகாதார அமைப்பு வலுப்படுத்தல் பயிலரங்கம் நேற்று முன்தினம் துவங்கியது.
ஜிப்மர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறை சார்பில், 5வது தேசிய சுகாதார அமைப்பு வலுப்படுத்தல் பயிலரங்கம் நேற்று முன்தினம் துவங்கியது. வரும் 20ம் தேதி வரை நடக்கும் பயிலரங்கத்திற்கு ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நேகி, மருத்துவ கண்காணிப்பாளர் சாகா வினோத்குமார் தலைமை தாங்கினர். டாக்டர் கணேஷ்குமார் வரவேற்றார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் சுந்தரராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
டாக்டர் சிதான்ஷூ சேகர் கர், சிறப்புரையாற்றினார். பிரேமராஜன் துவக்க உரையாற்றினார். டாக்டர் சாகா வினோத்குமார், மூன்றாம் நிலை மருத்துவ பராமரிப்பு மற்றும் கற்பித்தல் மருத்துவமனையில் சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல் குறித்து பேசினார். டாக்டர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.
