/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவர்களுக்கு மாநில தடகள போட்டி புதுச்சேரியில் நாளை துவக்கம்
/
பள்ளி மாணவர்களுக்கு மாநில தடகள போட்டி புதுச்சேரியில் நாளை துவக்கம்
பள்ளி மாணவர்களுக்கு மாநில தடகள போட்டி புதுச்சேரியில் நாளை துவக்கம்
பள்ளி மாணவர்களுக்கு மாநில தடகள போட்டி புதுச்சேரியில் நாளை துவக்கம்
ADDED : ஏப் 25, 2025 04:42 AM
புதுச்சேரி: விளையாட்டு துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஓட்டப் பந்தயம் மற்றும் தடகளப் போட்டிகள் நாளை 26 மற்றும் 27ம் தேதிகளில் புதுச்சேரி, கோரிமேட்டில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது.
இப்போட்டிக்காக  பள்ளி மற்றும் மண்டல அளவில் போட்டிகள் நடத்தி, மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில், புதுச்சேரி, உழவர்கரை, வில்லியனுார், பாகூர், காரைக்கால் தெற்கு, காரைக்கால் வடக்கு, ஏனாம் மற்றும் மாகி ஆகிய 8 மண்டலங்களில் இருந்து தலா 43 மாணவர்கள், 37 மாணவிகள் என, மண்டலத்திற்கு 80 பேர் வீதம் மொத்தம் 640 பேர் பங்கேற்க உள்ளனர்.போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே 14 வயதிற்கு உட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் 100, 200, 400, 600, 800, 1500, 3,000, 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4க்கு 100 மற்றும் 4க்கு 400 தொடர் ஓட்டங்கள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், டிரிபுள் ஜம்ப், குண்டு எறிதல், வட்டு எறிதல், மற்றும் ரோலர் ஸ்கேட்டிங்  போட்டிகள் நடைபெற உள்ளது.