/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில கோ - கோ போட்டி: அமைச்சர் துவக்கி வைப்பு
/
மாநில கோ - கோ போட்டி: அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : அக் 30, 2025 07:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி அமெச்சூர் கோ - கோ சங்கம், பங்கூர் குமரன் விளையாட்டு கழகம்சார்பில், சிறுவர், சிறுமிகளுக்கானமாநில அளவிலான சாம்பியன்ஷிப்போட்டி நடந்தது.
வில்லியனுார், விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கி துவக்கிவைத்தார். சங்க துணைத் தலைவர் சீத்தாராமன், விளையாட்டு கழக செயலாளர் ராம்மோகன் முன்னிலை வகித்தனர்.போட்டியில் சிறுவர் மற்றும் சிறுமியர் என, தலா 16 அணிகள் கலந்து கொண்டன.
சிறுவர் பிரிவில் திருக்காஞ்சி மண்வாசம் இளைஞர் நற்பணி மன்றம், உறுவையாறு அரசு உயர்நிலைப் பள்ளி, மங்கலம் போனிக்ஸ் விளையாட்டு கழக அணிகளும், சிறுமியர் பிரிவில் வீமன் நகர், என்.ஆர். விளையாட்டு கழகம், முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மங்கலம் போனிக்ஸ் விளையாட்டு கழக அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு சங்க செயலாளர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் தனகோடி, மின்துறை தொழிற்சங்க பொது செயலாளர் செந்தில்குமார், நுண்கலை ஆசிரியர்திலீப் பிரசன்னா, லிங்கேஸ்வரன், ராஜ்குமார், முன்னாள் தேசிய விளையாட்டு வீரர்கள் கண்ணன்,ரவி,பாக்கியலட்சுமி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

