ADDED : பிப் 02, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி கேரம் அகாடமி சார்பில் புதுச்சேரி முதல்வர் கோப்பைக்கான 17-வது மாநில அளவிலான கேரம் போட்டி ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் துவங்கியது.
போட்டியினை சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன் துவக்கி வைத்தார். போட்டியில் புதுச்சேரி யில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 700க்கும் மேற் பட்ட மாணவ, மாணவி கள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நேற்று பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகள் நடந்தது. இன்று கால் இறுதி, அரை இறுதி போட்டிகள் நடக்கிறது.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர்.