மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி சிறந்த படைப்புகளை பேராசிரியர்கள் தேர்வு
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி சிறந்த படைப்புகளை பேராசிரியர்கள் தேர்வு
ADDED : நவ 19, 2026 05:15 PM

புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை சார்பில் நடக்கும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்யும் பணியில் கல்லுாரி பேராசிரியர்கள் குழுவினர் இன்று (நவ.,19) ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் 2026ம் ஆண்டிற்கான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி வில்லியனுார், விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது. அதன் நிறைவு விழா இன்று (20ம் தேதி) மாலை 3:00 மணிக்கு நடக்கிறது. விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், கடலுார் பெரியார் கலைக் கல்லுாரி விலங்கியல் துறை தலைவரும், இணை பேராசிரியருமான அருள்தாஸ், இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ஞானவேல், தாகூர் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் மாணவ, மாணவிகள் வைத்துள்ள அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, சிறந்த படைப்புகளை தேர்வு செய்யும் பணியில் இன்று ஈடுபட்டனர்.
இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு நிறைவு விழாவில் கவர்னர், முதல்வர் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குகின்றனர்.
