/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
/
மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
ADDED : ஜன 02, 2025 06:45 AM

திருக்கனுார்: வில்லியனுார் மாவட்ட கைப்பந்து அசோசியேஷன் சார்பில், 28வது சீனியர் மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் பி.எஸ்.பாளையம் பள்ளி மைதானத்தில் நடந்தது.
ஆண்கள், பெண்கள் என பிரிவுகளாக நடந்த இப்போட்டியில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 12 அணிகள் கலந்து கொண்டன.
இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வில்லியனுார் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
இரண்டாம் பரிசை ஆண்கள் பிரிவில் காரைக்கால் அணியும், பெண்கள் பிரிவில் அரியாங்குப்பம் அணியும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, மாநில கைப்பந்து அசோசியேஷன் பொது செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார். பி.எஸ்.பாளையம் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் ராமமூர்த்தி, கண்ணன் முன்னிலை வகித்தனர்.
விழாவில், திருக்கனுார் தனியார் பள்ளி தாளாளர் அருண்குமார், துரை பாக்கியராஜ், தரணிதரன், பிரகாஷ், பாஸ்கர், வெங்கடேசன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர்.
வில்லியனுார் மாவட்ட செயலாளர் கருணைபிரகாசம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் விஜயகுமார், விரிவுரையாளர் மாயவன், சிவகணேஷ், அன்பு சிவம், பூவரசன், பஞ்சாசரம், கலைவாணன் ஆகியோர் செய்திருந்தனர்.