/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை:முதல்வர் அறிவிப்பு
/
கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை:முதல்வர் அறிவிப்பு
கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை:முதல்வர் அறிவிப்பு
கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை:முதல்வர் அறிவிப்பு
ADDED : டிச 08, 2024 05:12 AM
புதுச்சேரி : புதுச்சேரி சுகாதாரத்துறை,தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் '100 நாள் காசநோய் ஒழிப்பு' விழிப்புணர்வு பிரசார துவக்க விழா நேற்று நடந்தது.
கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில், காசநோய் விழிப்புணர்வு பிரசார வாகனம்,பள்ளி மாணவர்களின் ஊர்வலத்தை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு வழங்கி, அவர், பேசியதாவது;
மத்திய அரசு 2025க்குள் காசநோய் இல்லாத நிலையை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்குள், காசநோயை ஒழிக்க, அது சம்பந்தமான பிரசாரம் அவசியம். காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுடன் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் காசநோய் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். காசநோய் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும்.அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி துவங்கப்படவுள்ளது.
பாகூர், மடுகரை, நெட்டப்பாக்கம் ஆகிய கிராமப்புற மக்களுக்காக கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையத்தை, 100 படுக்கை வசதி கொண்ட பொது மருத்துவமனையாக மாற்ற உள்ளோம்.
காரைக்காலிலும் புதிய மருத்துவமனை கட்டுவதற்குஇடம் தேர்வு செய்யப்பட்டு, இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.புதுச்சேரியில் மருத்துவ வசதியை மேம்படுத்தி, தொடர் நோய், தொற்று நோய்களை குறைக்க வேண்டும்என்பது அரசின் எண்ணம். எனவே, நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்' என்றார்.
ரமேஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், சுகாதாரத்துறை இயக்குநர் (பொ) செவ்வேள், என்.ஆர்.எச்.எம்., திட்ட இயக்குனர் கோவிந்தராஜ், துணை இயக்குநர்கள் ரகுநாதன், ராஜாம்பாள், காசநோய் அதிகாரி வெங்கடேஷ், கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.