/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாளை 10 இடங்களில் புயல் ஒத்திகை; கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
/
நாளை 10 இடங்களில் புயல் ஒத்திகை; கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
நாளை 10 இடங்களில் புயல் ஒத்திகை; கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
நாளை 10 இடங்களில் புயல் ஒத்திகை; கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 14, 2024 03:46 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நாளை 10 இடங்களில் நடக்கும்புயல் பேரிடர்ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒருங்கிணைப்பில், புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய 4 பிராந்தியத்திலும், ஒரே நேரத்தில் நாளை 15ம் தேதி காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, புயல் மற்றும் புயலால் துண்டாடப்பட்ட பேரிடர்கள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது.
ஒத்திகை சம்பந்தமாக அரசு செயலர் வல்லவன், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், சப் கலெக்டர்கள் அர்ஜூன் ராமக்கிருஷ்ணன், சோமசேகர் அப்பாராவ் முன்னிலையில் விளக்க கூட்டம் நடந்தது. காரைக்கால், மாகி, ஏனாம் சப்கலெக்டர்கள் கானொளி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை முகமை வழிகாட்டுதலுடன், நாளை நடக்கும் பேரிடர்ஒத்திகை நிகழ்ச்சியில், தேசிய பேரிடர் மேலாண்மை முகமை, தேசிய பேரிடர் மீட்பு குழு, கடலோர காவல்படை ஒருங்கிணைப்புடன், புதுச்சேரி சுகாதாரம், தீயணைப்பு, பொதுப்பணி, உள்ளாட்சி, போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பங்கு பெற உள்ளது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி துறைமுகம், சின்ன வீராம்பட்டினம், நரம்பை, காலாப்பட்டு கேம்பேப் ரசாயன தொழிற்சாலை, ஒதியம்பட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஏரிப்பாக்கம் எம்.ஆர்.எப்., வெங்கட்டா நகர் துணை மின் நிலையம், காட்டுக்குப்பம் துணை மின் நிலையம், ஆரியப்பாளையம் மற்றும் இந்திரா காந்தி அரசு பொதுமருத்துவமனை பகுதியில் நடக்கிறது.
இது ஒத்திகை நிகழ்ச்சி மட்டுமே. எனவே, பொதுமக்கள் தேவையற்ற பீதிக்கு ஆளாக வேண்டியதில்லை. இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்குமாறு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் கேட்டு கொண்டார்.

