/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புயல் முன்னெச்சரிக்கை ஏனாமில் தீவிரம்
/
புயல் முன்னெச்சரிக்கை ஏனாமில் தீவிரம்
ADDED : அக் 29, 2025 06:57 AM
புதுச்சேரி: 'மோந்தா' புயல் காரணமாக ஏனாமில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
'மோந்தா'புயல் காரணமாக, ஏனாமில், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று மதியத்திற்கு மேல் அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டன. ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கடலும், கோதாவரி ஆறும் சேரும் இடத்தில், நீர் மட்டம் உயர்ந்தது. மேலும், சாவித்திரி நகர், தரியல திப்பா, அம்பேத்கர் நகர், ராஜிவ் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். சாவித்திரி நகர், கிரியாம்பேட்டா, தரியல திப்பா ஆகிய மீனவ குடியிருப்பு பகுதிக்குள் ஆற்று நீர் உள்ளே புகுந்தது. புயல் எதிரொலியாக, இன்று (29ம் தேதி) அதிக கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

