/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
/
மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஏப் 15, 2025 04:19 AM

புதுச்சேரி: மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஆசிரியர் முருகன் வரவேற்றார். தலைமையாசிரியர் கணேசன் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளியில் உள்ள வசதிகள், அரசின் பல்வேறு திட்டங்கள், பள்ளியில் கொடுக்கப்படும் சிறப்பு பயிற்சிகள் குறித்த துண்டு பிரசுரங்கள் கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
மேலும், ஆட்டோ வாகன ஒலிபெருக்கி மூலமாகவும் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊர்வலத்தில் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் தமிழரசி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சாந்தி, மஞ்சு, ரவீனா, இந்திரா, பானுபிரியா, மதிவதனி, அன்பரசி செய்திருந்தனர்.