ADDED : மார் 20, 2024 05:05 AM

புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கல்வி சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரி, காட்டேரிக்குப்பம், அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, பகுதி முழுதும் உள்ள வீதிகளுக்கு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை, பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனுவாசன் துவக்கி வைத்தார்.
இதையொட்டி, 2024-25,ம் ஆண்டிற்கான கல்விச்சேர்க்கை முக்கியத்துவம் குறித்து துண்டு பிரசுரங்களை, பொதுமக்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், மலைவாழ் மக்கள் வசிக்கும் ராஜாகுளத்திற்கு சென்று தலைவர் சத்தியமூர்த்தி, முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினர்.
பள்ளிக்கு வராத மாணவர்களையும், சிறு வயதிலேயே, வேலைக்கு செல்லும் மாணவர்களையும் கட்டாயம் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து அனைவரிடமும் விளக்கி கூறினர்.

