ADDED : ஏப் 12, 2025 07:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் சார்பில், கல்வித்துறை வளாகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மன்றங்களின் மாநில தலைவர்கள் முருகன், உதயராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிர்வாகிகள் அகல்யா, உமாசங்கரி, சிவராமகிருஷ்ணன், எரிக் ரம்போ, கவிநிலவு, வேணி, முகிலன், பிரவீன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் எழிலன், முரளி கோரிக்கை குறித்து பேசினர்.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அந்தோணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். என்.ஆர்.காங்., பா.ஜ., அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் அவசரகதியில் அமல்படுத்தப்பட்ட சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை கைவிட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

