UPDATED : நவ 03, 2026 01:11 AM
ADDED : நவ 03, 2026 01:07 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாணவர் விடுதியில், உணவுப் பொருள் பற்றாக்குறை பிரச்னை குறித்து, நடவடிக்கை எடுக்கக்கோரி, விடுதி பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ், மாணவர்களுக்கான 35 விடுதிகள் உள்ளன. இதில், விக்கிரவாண்டி, கிளியனுார், சித்தலிங்கமடம் உள்ளிட்ட சில விடுதிகளில் மாணவர்களுக்கு சமைப்பதற்கு போதிய உணவு பொருட்கள் வழங்கவில்லை என, சமீபத்தில் விடுதி பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், விக்கிரவாண்டி மாணவர் விடுதியில், நேற்று உணவு பொருள் குறைவாக வழங்கப்பட்டதாக கூறி விடுதி பணியாளர்கள், விடுதி வார்டனிடம் அதிருப்தி தெரி வித்துள்ளனர். இதில், கோபமடைந்த வார்டன், பதிலளிக்காமல் மிரட்டிச் சென்றதாக புகார் எழுந்தது.
இதனால், விரக்தியடைந்த அனைத்து பிற்பட்டோர் நல விடுதி பணியாளர் சங்கத்தினர், நேற்று இரவு 7:00 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர்.
நடவடிக்கை எடுக்கக்கோரி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு, கலைந்து சென்றனர்.
