/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக விழா
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக விழா
மணக்குள விநாயகர் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக விழா
மணக்குள விநாயகர் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக விழா
ADDED : ஜன 22, 2026 05:47 AM

புதுச்சேரி: மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் 15வது பட்டமேற்படிப்பு (எம்.டி.எம்.எஸ்) மாணவர்கள் அறிமுக விழா நடந்தது.
மணக்குள விநாய கர் மருத்துவக் கல்லுாரி மேலாண் இயக்குநர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோ ர் தலைமை தாங்கினர்.
விழாவில் தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன் பேசுகையில், 'மருத்துவ கல்வி செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், ஆராய்ச்சி ஆகியவற்றுடன் புதிய பரிணாமத்தை அடைத்து வருகிறது. எதிர்காலத்தில் மருத்துவர்கள், ஏ.ஐ., எதிரியாக அல்ல, தங்களின் துணையாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான முழுமையான பாடத்திட்டம் மற்றும் பயிற்சி வசதிகளை கல்லுாரி வழங்கி வருகிறது.
என்.ஏ.ஏ.சி.ஏ., நாக் சான்றிதழ், என்.ஏ.பி.எச்., - என்.ஏ.பி.எல்., ஆராய்ச்சி அங்கீகாரங்கள் உள்ளிட்ட அனைத்து அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது' என்றார்.
விழாவில் மருத்துவமனை இயக்குநர் காக்னே, டீ ன்கள் கார்த்திகேயன், சஞ்சய், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை மருத்துவ கண்காணிப்பாளர் கிரிஜா, டாக்டர் சவுந்தர்யா, பதிவாளர் தட்சிணாமூர்த்தி, துணை பதிவாளர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் புதிய பட்டமேற்படிப்பு மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

