ADDED : நவ 18, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மதகடிப்பட்டில் மாணவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நேற்று (நவ.,17) சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், அவரை பள்ளியில் இருந்து அனுப்பி வைப்பதாகவும் அவரின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் திருபுவனை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
