/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவிக்கு பாலியல் தொல்லை; குற்றப்பத்திரிக்கை தாக்கல்
/
மாணவிக்கு பாலியல் தொல்லை; குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மாணவிக்கு பாலியல் தொல்லை; குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மாணவிக்கு பாலியல் தொல்லை; குற்றப்பத்திரிக்கை தாக்கல்
ADDED : ஜூன் 06, 2025 08:47 AM
புதுச்சேரி; பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், போலீசார் குற்றப்பத்திரிக்கையை, கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் மணிகண்டன், 25, என்பவர் ஆறு வயது மாணவிக்கு, கடந்த பிப்., 14ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்தார். அவரது பெற்றோர் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை, போக்சோவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரி பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
அதையடுத்து, முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன், மகளிர் சப் இன்ஸ்பெக்டர் சத்யா ஆகியோர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, வழக்கை விசாரணை நடத்தினர். ஆசிரியர் மணிகண்டன், புதுச்சேரி கோர்ட்டில், ஜாமின் கேட்டு, இருமுறை மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமின் மனுவை, கோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக, 20 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, 150 பக்க குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு, புதுச்சேரி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் போக்சோ கோர்ட்டுக்கு வர உள்ளது.