/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
' தினமலர்' வழிகாட்டி கல்வி திருவிழா நிறைவு மாணவர்கள், பெற்றோர் ஆர்வத்துடன் குவிந்தனர்
/
' தினமலர்' வழிகாட்டி கல்வி திருவிழா நிறைவு மாணவர்கள், பெற்றோர் ஆர்வத்துடன் குவிந்தனர்
' தினமலர்' வழிகாட்டி கல்வி திருவிழா நிறைவு மாணவர்கள், பெற்றோர் ஆர்வத்துடன் குவிந்தனர்
' தினமலர்' வழிகாட்டி கல்வி திருவிழா நிறைவு மாணவர்கள், பெற்றோர் ஆர்வத்துடன் குவிந்தனர்
ADDED : மார் 31, 2025 05:29 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், 'தினமலர்' வழிகாட்டி கல்வி திருவிழா நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இரண்டாம் நாளிலும் குவிந்த மாணவர்கள், பெற்றோர்கள் கல்வியாளர்களிடம் நேரடியாக ஆலோசனை பெற்று, எதிர்கால படிப்புகள் குறித்து குழப்பம் தீர்ந்து தெளிவு பெற்றனர்.
பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம்; எதை படித்தால் வாழ்வு வளமாகும்; எதிர்காலம் சிறக்கும் என்ற ஆலோசனைகளை தெரிவிக்கும், இந்தாண்டிற்கான 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, நேற்று முன்தினம் புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் துவங்கியது.
கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் கல்லுாரி பிரதிநிதிகள் ஆலோசனை வழங்கினர்.
முதல் நாள் கருத்தரங்கில் கோர் இன்ஜினியரிங் படிப்புகள், நீங்களும் விஞ்ஞானி ஆகலாம், எதிர்கால சி.ஏ., வணிகவியல் படிப்புகளில் வாய்ப்புகள், புதிய தொழில்நுட்பம், சென்டாக் அட்மிஷன், வேலைவாய்ப்பு திறன், உடனடி வேலை அளிக்கும் படிப்புகள் குறித்து கலந்துரையாடி விளக்கம் அளித்தனர்.
குவிந்தனர்
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று இரண்டாம் நாளாக 'களை' கட்டியது. கருத்தரங்க காலை அமர்வில் சென்னை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் பிரசன்னகுமார், ஐ.டி., கம்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ., மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் படிப்புகள் குறித்தும், மகேந்திரா அண்ட் மகேந்திரா டெக்னோ இன்னோவேஷன் துணைத் தலைவர் சங்கர் வேணுகோபால் பேசினர்.
தொழிற்சாலைகள் எதிர்பார்க்கும் வேலைக்கான திறன்கள், கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி எதிர்கால இன்ஜினியரிங் படிப்புகள் குறித்தும், மதுரை சுப்புலட்சுமி அறிவியல் கல்லுாரி மரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை துறைத் தலைவர் சுரேஷ்குமார், மரைன் கேட்டரிங் ேஹாட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
மாலையில் நடந்த இரண்டாம் அமர்வு கருத்தரங்கில், வங்கியாளர் விருத்தாசலம் வங்கி கடன் பற்றியும், கல்வியாளர்கள் அரவிந்த், சர்வதேச நிதி சார்ந்த படிப்புகள் பற்றியும், அஸ்வின் நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வு பற்றியும் விளக்கம் அளித்தனர். கல்வி ஆலோசகர்கள் கூறிய உயர் கல்வி தொடர்பான கருத்துக்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த கருத்துக்களை மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
வழிகாட்டி நிகழ்ச்சியில் முன்னணி கல்வி நிறுவனங்களின் 50 ஸ்டால்கள், இடம் பெற்று இருந்தன. ஒவ்வொரு கல்லுாரியிலும், என்னென்ன படிப்புகள் இருக்கின்றன.
அங்குள்ள வசதிகள் விவரம், படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் குறித்த விவரம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், ஒரே இடத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு இருந்தது.
நேற்றைய இறுதி நாளிலும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளுக்கு சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர், அங்கிருந்த கல்வி நிறுவன பிரதிநிதிகளிடம், கல்லுாரிகளின் பாடப்பிரிவுகள், சேர்க்கை முறை, கல்வி கட்டணம் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து, நேரடி ஆலோசனை பெற்றனர்.
மாணவர்களுக்கு பரிசு
இரு நாட்களும் நடந்த உயர்கல்வி கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பொது அறிவு போட்டிகள் நடத்தி, லேப்டாப், டேப்லெட் மற்றும் வாட்சுகள் பரிசாக வழங்கப்பட்டன. கடந்த இரு நாட்களில் 26 மாணவ, மாணவிகள் பரிசை வென்றனர்.
தொடர்ந்து புதுச்சேரியில் மாணவர் கல்வி திருவிழா போல, கோலாகலமாக நடத்தப்பட்ட வழிகாட்டி நிகழ்ச்சி, நேற்று இரவு 7:00 மணியுடன் இனிதே நிறைவு பெற்றது.
இரு நாட்களும் உயர்கல்வி குறித்த ஆலோசனை பெற்ற மாணவர்கள், பெற்றோர், உயர்கல்வியை தேர்வு செய்வது குறித்த குழப்பம் தீர்ந்து, தெளிவு பெற்றதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியை தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம், ருசி பால் நிறுவனம், எஸ்.மீடியா சேனல், அக்குவாகீரின் குடிநீர், 92.7 பிக் எப்.எம்., ஆகியவை இணைந்து வழங்கின.