/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய குற்றவியல் சட்டம் குறித்த ஆய்வு கூட்டம்
/
புதிய குற்றவியல் சட்டம் குறித்த ஆய்வு கூட்டம்
ADDED : டிச 28, 2025 05:41 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு அர்பணித்தார். தொடர்ந்து, புதுச்சேரி தலைமை செயலகத்தில், அவரது தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
அதில், மத்திய அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்தும், புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், அரசு செயலர்கள், போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி., மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

