/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊசுட்டேரியில் திடீர் படகு குழாம்; புதுச்சேரி வனத்துறை விசாரணை
/
ஊசுட்டேரியில் திடீர் படகு குழாம்; புதுச்சேரி வனத்துறை விசாரணை
ஊசுட்டேரியில் திடீர் படகு குழாம்; புதுச்சேரி வனத்துறை விசாரணை
ஊசுட்டேரியில் திடீர் படகு குழாம்; புதுச்சேரி வனத்துறை விசாரணை
ADDED : ஜன 30, 2024 06:13 AM

புதுச்சேரி : ஊசுட்டேரியில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரி 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.
ஒவ்வொரு ஆண்டும் இங்கு ஏராளமான உள்நாட்டு பறவைகளும், வெளிநாட்டு பறவைகளும் வருகின்றன. இதனால், ஊசுட்டேரி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்துக்கண்ணு பஸ் நிறுத்தம் அருகே, ஊசுட்டேரி கரையின் இரும்பு வேலியை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துள்ளனர்.
அங்கு, படகுகள் நிறுத்தும் இடம் (ஜெட்டி) புதிதாக கட்டப்பட்டுள்ளது. 3 படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, ஊசுட்டேரியில் புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாம் இயங்கி வருகிறது.
வனத்துறையில் கேட்டபோது, 'ஊசுட்டேரியில் புதிதாக படகு குழாம் அமைக்க யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. படகு குழாம் அமைத்துள்ளது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.