/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பெண்கள் பள்ளியில் சர்க்கரை பலகை திறப்பு
/
அரசு பெண்கள் பள்ளியில் சர்க்கரை பலகை திறப்பு
ADDED : ஜூலை 18, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்க்கரை பலகை திறப்பு விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர் சிவராமன் சர்க்கரை பலகையை திறந்து வைத்து சர்க்கரை நோய் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர், சர்க்கரை நோய் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொறுப்பாசிரியர் காயத்ரி நன்றி கூறினார். இதில், அனைத்து ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மனையியல் விரிவுரையாளர் தெய்வகுமாரி செய்திருந்தார்.