UPDATED : நவ 14, 2026 09:57 PM
ADDED : நவ 14, 2026 06:10 PM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி, வேல் வாங்குதல் நிகழ்ச்சி இன்று நடந்தது.
முத்தியால்பேட்டையில் சுந்தர விநாயகர், வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவிலில், 165ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 10ம் தேதி துவங்கியது.
தினமும் காலை சிறப்பு அபிஷேகம், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிவுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை சிங்க முகா சூரன் புறப்பாடு, கழுமரம் நடும் நிகழ்ச்சி, இரவு வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாளை (15ம் தேதி) மதியம் 2:30 மணிக்கு தாரகா சூரன் புறப்பட்டு, இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. நாளை மறுதினம் 16ம் தேதி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 20ம் தேதி மாலை 5:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.
