ADDED : நவ 08, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் கோவிலில், சூரசம்ஹார விழாவில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அரியாங்குப்பம், சுப்பையா நகர் பாலமுருகன் கோவிலில், நேற்று சூரசம்ஹார விழாவையொட்டி, சாமிக்கு சிறப்பு அபிேஷகம் பூஜைகள் நடந்தது. மாலை சூரசம்ஹார விழா நடந்தது.
அதே போல, முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முத்துகுமாரசாமி கோவில், நைனார்மண்டபம் சுப்ரமணியர் கோவில், தவளக்குப்பம் சிவசுப்ரமணியர் கோவில், சாரம் சுப்பிரமணிய கோவிலில், சிறப்பு பூஜைகளும், நேற்று மாலை சூரசம்ஹார விழா நடந்தது. தொடர்ந்து, தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது.
இவ்விழாவில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

