தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சூரசம்ஹாரம் விழா கொடியேற்றம்

சூரசம்ஹாரம் விழா கொடியேற்றம்

சூரசம்ஹாரம் விழா கொடியேற்றம்


ADDED : நவ 10, 2026 06:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 06:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே செல்வ விநாயகர், வீரபாகு தேவர், வள்ளி தெய்வானை உடனுறை கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 74வது ஆண்டு கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 14ம் தேதி இரவு 8:00 மணிக்கு வேல் வாங்குதல், சிங்க முகன் சம்ஹாரம், 16ம் தேதி இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் விழா நடக்கிறது.

வரும் 16ம் தேதி காலை 9:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம், 20ம் தேதி வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் இரவு 8:00 மணிக்கு தெப்ப உற்சவம், 27ம் தேதி இரவு 8:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us