/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் விழா
/
சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 07, 2025 01:34 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு, கலை பண்பாட்டுத்துறை சார்பில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி 125வது பிறந்த நாள் விழா கடற்கரைச் சாலையில் உள்ள நகராட்சி அரங்கில் நேற்று நடந்தது.
விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி உருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
இதில், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, செல்வகணபதி எம்.பி., சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ., தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு செயலர் முகமது அஹ்சன் அமித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.