ADDED : பிப் 18, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் தெரு நாய்கள் அதிகரித்து வருவதால், பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன. நடந்து செல்லும் மாணவர்களை விரட்டி செல்கின்றன. நாய்களை பிடிக்க பொதுமக்கள், நகராட்சியினருக்கு தொடர்ந்து புகார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நகராட்சியில், 5 ஆயிரத்து 987 தெரு நாய்கள், உழவர்கரை நகாட்சி பகுதியில் 7 ஆயிரத்து 929 தெரு நாய்கள் இருந்தது. அதனை அடுத்து, விலங்கு கட்டுப்பாட்டு திட்டத்துக்கான பணிகளை செயல்படுத்த அரசு சாரா நிறுவனம் உள்ளாட்சித்துறை இறுதி செய்தது.
இந்த அமைப்பு, பயிற்சி பெற்ற கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மூலம், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.