/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் தினத்தையொட்டி டேபிள் டென்னிஸ் போட்டி; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

ADDED : ஜன 24, 2024 04:27 AM

புதுச்சேரி : தேசிய வாக்காளர் தின டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக உழவர்கரை டான் பேட்மிட்டன் அகாடமியில் டேபிள் டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டது.
அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, மற்றும் தனியார் துறை ஊழியர்கள் என, 210 பேர் பங்கேற்றனர். போட்டியை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர, துணைத்தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல், தேர்தல் அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் நாராயணன் முதலிடம், சஞ்சய் இரண்டாமிடம், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் சிவஸ்ரீ முதலிடம், நந்தினி ராஜி இரண்டாமிடம் பிடித்தனர்.
இரட்டையர் பிரிவில், அண்ணாமலை, இலக்கியன் அணி முதலிடம், நித்தின், பிரியன் அணி இரண்டாமிடம் பிடித்தனர். முதியவர்களுக்கான போட்டியில் அய்யப்பன், முரளி முதலிடம், ஜார்ஜ் லுாசியன் இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேராசிரியர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டுப் போட்டியை புதுச்சேரி ஆதித்தியா டேபிள் டென்னிஸ் அகடாமி பயிற்சியாளர் சற்குருநாத் தலைமையில் உதவியாளர்கள் செய்திருந்தனர்.