/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் 35ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி
/
தாகூர் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் 35ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி
தாகூர் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் 35ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி
தாகூர் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் 35ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : நவ 19, 2025 08:18 AM

புதுச்சேரி: தாகூர் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் 35ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சியையொட்டி மரக்கன்றுகள் நட்டனர்.
தாகூர் கலைக் கல்லுாரி 1987-89ம் ஆண்டு எம்.எஸ்சி., தாவரவியல் படித்த மாணவர்களின் 35ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி ஆரோவில் ஆரண்யா காட்டில் நடந்தது.
இந்த சந்திப்பில் அனில்கோவிந்து, கிரிஜா, கஸ்மிதா, தேவசேனா, ஆறுமுகம், சரவணன், ஆறுமுகம் உள்ளிட்ட முதுகலை மாணவர்களும், ராமானுஜம், நடனகுஞ்சிதம், ஜெயசந்திரன் ஆகிய மூன்று பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். அனைவரும் தங்களின் கல்லுாரி கால நினைவுகளை நெகழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். இறுதியில் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சந்தனவேங்கை, கரு ங்காலி, எட்டி, பூவந்தி, காட்டு எலுமிச்சை, மணிப்புங்கன் போன்ற மண்ணுக்குரிய பாரம்பரிய மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து ஆரண்யா காட்டை உருவாக்கிய சரவணனுக்கு வன உருவம் என்ற பட்டத்தை முன்னாள் மாணவர்கள் வழங்கி பாராட்டினர்.