/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அரசின் உதவித்தொகையை முறைகேடாக பெற்ற தமிழக முதியவர்
/
புதுச்சேரி அரசின் உதவித்தொகையை முறைகேடாக பெற்ற தமிழக முதியவர்
புதுச்சேரி அரசின் உதவித்தொகையை முறைகேடாக பெற்ற தமிழக முதியவர்
புதுச்சேரி அரசின் உதவித்தொகையை முறைகேடாக பெற்ற தமிழக முதியவர்
ADDED : ஜன 30, 2025 12:17 AM
புதுச்சேரி:   புதுச்சேரி அரசின் முதியோர் உதவித் தொகையை மோசடியாக பெற்று வந்த தமிழக முதியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் 55 வயதுக்கு மேற்பட்டோரில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முதியோர்களுக்கு அரசு உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பல்வேறு முறைகேடு நடப்பதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த பலர் புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை பெற்று வருவதாகவும் புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது.
சமீபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த நபர் புதுச்சேரியில் அரசு உதவித்தொகை பெறுவதை ஆதாரத்துடன் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
துறை ரீதியான விசாரணையில், கடலுார் மாவட்டம், செல்லஞ்சேரி, விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த துரைசாமி, 67; என்பவருக்கு நெட்டப்பாக்கம் பகுதியில் ஏராளமான விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலம் இருப்பதை பயன்படுத்தி, புதுச்சேரியில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ரூ. 1,40,700 உதவித்தொகை பெற்றது தெரியவந்தது.
இது தொடர்பாக துறை இயக்குநர் முத்துமீனா கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார், துரைசாமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

