தமிழக அமைச்சர் மீதான வழக்கு வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
தமிழக அமைச்சர் மீதான வழக்கு வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
ADDED : செப் 21, 2026 06:21 PM
புதுச்சேரி: தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் சகோதரரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன், கடந்த 2022ம் ஆண்டு புதுச்சேரி, எழில் நகரில் வசிக்கும் அவரது சகோதரர் மரியகுளோத் வீட்டின் கதவை உடைத்து மரியகுளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிந்தினர். இந்த வழக்கு புதுச்சேரி ஜே.எம். 1 கோர்ட்டில் நடந்தது வந்தது. வழக்கை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட் சேரலாதன், மாகேவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கை ஜே.எம்.2 நீதிபதி சந்திரசேகர் விசாரித்து வருகிறார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்கிடையில், ஜே.எம்.2 கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருவது தொடர்பாக, மரியவில்சன் தரப்பில், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆனந்த் வரும் 25ம் தேதி வரை இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தார். தலைமை நீதிபதியின் இடைக்கால தடை குறித்து வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
