/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனைபாளையத்தில் ரூ.24.27 லட்சத்தில் தார் சாலை: எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்;

ADDED : மே 06, 2025 04:49 AM

திருபுவனை: திருபுவனைபாளையத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறையின் கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டத்தின் சார்பில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட, திருபுவனைபாளையம் சேதுநகர் மற்றும் வெங்கடா நகர் பகுதியில் ரூ. 24 27 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தலைமையேற்று, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரச்செல்வம், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.