8வது மத்திய ஊதியக் குழுவிடம் ஆசிரியர்கள் சங்கம் மனு வழங்கல்
8வது மத்திய ஊதியக் குழுவிடம் ஆசிரியர்கள் சங்கம் மனு வழங்கல்
ADDED : செப் 09, 2026 06:53 PM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு அனைத்து ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கம் சார்பில் 8-வது மத்திய ஊதியக் குழுவின் தலைவர் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், உறுப்பினர்கள் புலக் கோஷ், பங்கஜ் ஜெயின் ஆகியோரிடம், சங்கத்தின் ஒருங்கிணைந்த தலைவர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், 8-வது மத்திய ஊதியக் குழுவில் 3.833 பிட்மென்ட் பேக்டர் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.69,000 ஆக நிர்ணயிக்க வேண்டும். ஆண்டு ஊதிய உயர்வை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஜவஹர் பால்பவனில் பயிற்றுனர் பதவி உயர்வுக்கான 18 ஆண்டுகால தகுதியை, 10 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு படி, குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகை உயர்வு, டிஜிட்டல் கல்விக்கான சிறப்பு படி, உயர்கல்வித் தகுதிகளுக்கு உரிய ஊதியப் பயன் மற்றும் ஆசிரியர்களுக்கான தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் கல்விப் பணியுடன் தேவையற்ற நிர்வாக மற்றும் டிஜிட்டல் பணிச்சுமைகளைக் குறைத்து, கற்பித்தல் மற்றும் மாணவர் நலனில் முழுமையாக கவனம் செலுத்துவதற்கான பணிச்சூழலை உருவாக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது.
விரிவுரையாளர் பிரிவு தலைவர் மதிவாணன், தலைமையாசிரியர் பிரிவு தலைவர் பாலமுருகன், பிரபு கணேஷ், பட்டதாரி ஆசிரியர் பிரிவு தலைவர் ஜவஹர்லால் நேரு, மூர்த்தி, பூங்குன்றன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பிரிவு தலைவர் வாழ்முனி, குபேரன், கோபிநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.
