/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளம்பெண் கர்ப்பம் கணவர் மீது வழக்கு
/
இளம்பெண் கர்ப்பம் கணவர் மீது வழக்கு
ADDED : செப் 22, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், கர்ப்பம் காரணமாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு, சிகிச்சையின் போது அந்த இளம்பெண் 18 வயதிற்குட்பட்ட சிறுமி என்பது தெரியவந்ததால், லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், போலீசார் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாகிய நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.