/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் கும்பாபிஷேகம்: 48வது நாள் பூர்த்தி விழா
/
கோவில் கும்பாபிஷேகம்: 48வது நாள் பூர்த்தி விழா
ADDED : நவ 04, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : காமராஜ் நகர் தொகுதி கிருஷ்ணா நகர் செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, 48 வது நாள் பூர்த்தி விழா நடந்தது.
காலை 8:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை, 11:00 மணிக்கு சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. பல்வேறு பகுதிகை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா தலைவர் நாராயணசாமி, செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை சேமசுந்தரம், சம்மந்தம், தாமோதரன், யுவராஜ், அழகிரி, மகாலிங்கம், கோவில் அர்ச்சகர் கணேஷ் செய்திருந்தனர்.