/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி அமைச்சர் நமச்சிவாயம் பரிசளிப்பு
/
டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி அமைச்சர் நமச்சிவாயம் பரிசளிப்பு
டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி அமைச்சர் நமச்சிவாயம் பரிசளிப்பு
டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி அமைச்சர் நமச்சிவாயம் பரிசளிப்பு
ADDED : அக் 09, 2025 01:59 AM

திருக்கனுார்: டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் 12வது ஜூனியர் 19 வயதிற்கு உட்பட்ட மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.
திருக்கனுார் பிரைனி ப்ளும்ஸ் இண்டர்நேஷனல் பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில், ஆண்கள் பிரிவில் 23 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் கலந்து கொண்டன. பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில் லோட்டஸ் அணி முதலிடத்தையும், ஏ.பி.ஜே., அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
சிறந்த பேட்ஸ்மேனாக அஜய், சிறந்த பந்து வீச்சாளராக குகன் ராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.
பெண்கள் பிரிவில் காமராஜர் அணி முதலிடத்தையும், ஏ.பி.ஜே., அணி இரண்டாம் இடத்தை பிடித்தன. சிறந்த பேட்டிங் வீராங்கனையாக தரணி,சிறந்த பந்து வீச்சாளராக அஸ்ரா அஞ்சும் தேர்வு செய்யப்பட்டனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சங்க செயலாளர் ரத்தன பாண்டியன் தலைமையில்ஒருங்கிணைப்பாளர்பழனிவேல்,பிரைனி ப்ளூம்ஸ் பள்ளி உடல் கல்வி ஆசிரியர் நீலஸ் ராஜா, கணபதி உள்ளிட்டோர் விழாவிற்கான செய்திருந்தனர்.